பிக்பாஸில் நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகம். நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருந்த ஓவியாவுகம், ஜூலியும் வெளியேறிவிட்ட நிலையில் நிகழ்ச்சி டல் அடிக்க ஆரம்பித்து விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. ஓவியாவின் தனித்துவமான குணத்தினாலும், ஜூலியின் அழுவாச்சியை காமெடியாகவும் மக்கள் ரசித்து வந்தார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடையிடையே சினேகனின் கட்டிப்பிடி வைத்தியம், காயத்ரியின் அலட்டல் நாடகம், வையாபுரியின் புலம்பல் என நிகழ்ச்சி களை கட்டியது. ஓவியா, ஜூலி இல்லாத நிலையில் நிகழ்ச்சியை களைகட்ட வைக்க புதுவிதமாக விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியும் நிகழ்ச்சியை கலகலப்பாக்க முயற்சிக்கிறார் பிக் பாஸ். ஆனாலும் ரசிகர்களை ஈர்க்கவில்லை.