திடீரெனெ ஒரு பெண் முத்தம் கொடுத்துவிட்டார்… அதிர்ச்சி சம்பவத்தைப் பகிர்ந்த துல்கர் சல்மான்!

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:24 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து அனைத்து மொழிகளிலும் பரீட்சியமான நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் உருவான சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தெலுங்கில் உருவான இந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.

இப்போது அவர் நடிப்பில் கிங் ஆஃப் கோதா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.  மேலும் அவர் நடித்துள்ள வெப் சீரிஸ் ஒன்றும் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் ரசிகர்களோடு நடக்கும் எதிர்பாராத தர்மசங்கடமான சம்பவங்கள் குறித்து அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் “வயதான ஒரு பெண் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கும் போது திடீரென முத்தம் கொடுத்துவிட்டார். அதனை பெரிதுபடுத்தாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன்.  இன்னொரு வயதான பெண் என்னை பிடித்து இழுத்தார். அவர் ஏன் அப்படி செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. அது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்