விஜய்யின் 'லியோ 'பட புதிய அப்டேட் ...

சனி, 19 ஆகஸ்ட் 2023 (19:05 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்   வாரிசு படத்தின் வெற்றிக்குப் பின் நடித்து வரும் படம் லியோ. இப்படத்தை மாஸ்டர் படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து, திரிஷா, அர்ஜூன், மிஸ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில்  பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும்  அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில்,   நடிகர் விஜய் வெகேசனுக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார்.   இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி,  நடிகர் அர்ஜூன் #HaroldDas என்ற கேரக்டரில்  நடித்த லியோ  பட கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இது பல லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.  அறிவித்தது.

இந்த நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடக்கும் ? எங்கு நடக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில்,  நடிகர் விஜய்யின் லியோ படம் ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் 5 ஆம் தேதி மலேசியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்