கன்னட சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய ராஷ்மிகா தற்போது பேன் இந்தியா நடிகையாக அறியப்படுகிறார். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். பாலிவுட்டில் அவர் நடித்த அனிமல் உள்ளிட்ட படங்கள் பெருவெற்றி பெற்றன.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் நான் சார்ந்த கொடவா சமூகப் பின்னணியில் இருந்து யாரும் சினிமாவுக்குப் பெரிதாக வந்ததில்லை. அந்த சமூகத்தில் இருந்து வந்த முதல் பெண் நடிகை நான்தான்” எனத் தெரிவித்தார். ஆனால் கன்னட சினிமாவில் கொடவா சமூகத்தில் இருந்த பல நடிகைகள் வந்து நடித்துள்ளனர். ஆனால் அதை மறைத்து ராஷ்மிகா இப்படி பேசியதாக அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.