அமீர் கானுக்கும் எனக்கும் காட்சிகள் இல்லை… கூலி பட அப்டேட்டைப் பகிர்ந்த பிரபல நடிகர்கள்!

vinoth

செவ்வாய், 8 ஜூலை 2025 (13:55 IST)
ஜெயிலர் மற்றும் வேட்டையன் ஆகிய ஹிட் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. துறைமுகப் பின்னணியில் தங்கக் கடத்தல் பற்றிய படமாக ‘கூலி’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார் நாகார்ஜுனா. சமீபத்தில் அமீர்கான் படத்தில் இருப்பது பற்றி அப்டேட் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ள நாகார்ஜுனா “இந்த படத்தில் ரஜினி சாரோடு பல காட்சிகளில் சேர்ந்து நடித்துள்ளேன். ஆனால் எனக்கும் அமீர்கானுக்கும் காட்சிகள் இல்லை. ஏனென்றால் இருவரின் கதாபாத்திரங்களும் வெவ்வேறு அத்தியாயங்களைக் கொண்டது. இதில் ஒரு புதிய அமீர்கானைப் பார்ப்பீர்கள்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்