நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறது ‘டாக்டர்’: ரிலீஸ் தேதி இதுவா?

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (22:22 IST)
சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக ரிலீஸ் செய்து ஒத்தி வைக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது 
 
எனினும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் தேர்தல் முடிந்தவுடன் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டாக்டர் திரைப்படம் முதலில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது 
 
திரையரங்குகளில் ரிலீசாகி ஒரு மாதம் கழித்து இந்த படம் நெட்பிளிக்ஸில் ரிலீசாகும் என்றும் உதாரணமாக மே 13ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்றால் நெட்பிளிக்ஸில் ஜூன் 14-ஆம் தேதி ரிலீசாகும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் நெல்சன் இயக்கியிருக்கும் இந்த படத்தை கேகேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்