அஜித்தோடு அடுத்த படத்துக்கு துண்டு போட்டு வைத்த பிரபல இயக்குனர்!

vinoth
புதன், 22 மே 2024 (07:18 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நினைத்தபடி ஷூட்டிங் முடியாததால் இப்போது அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார். இதனால் ரசிகர்களும் விடாமுயற்சி படத்தைப் பற்றிக் கண்டுகொள்வதே இல்லை. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் மோகன் ராஜா, சமீபத்தில் அஜித்தை சந்தித்து ஒரு கதையை சொல்லியுள்ளதாகவும், அந்த கதையைக் கேட்ட அஜித் நேர்மறையான பதிலை சொல்லியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் இவர்கள் கூட்டணியில் விரைவில் ஒரு படம் உருவாகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்