அஜித்தை வைத்து ஆபாச போஸ்… சர்ச்சையைக் கிளப்பிய ஆதிக் ரவிச்சந்திரன்!

vinoth

திங்கள், 20 மே 2024 (08:02 IST)
அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வந்தார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதனால் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’  படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் மே 9 ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோ ஆக்‌ஷன் காட்சியோடு தொடங்கியது. அங்கே ஷூட்டிங் ஜூன் 7 ஆம் தேதி வரை நடக்க உள்ளதாக சொலல்ப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் அஜித் ஜிகு ஜிகு உடையில் மூன்று வித்தியாசமான போஸ்களில் இருக்கும்படி வடிவமைத்துள்ளனர். அதில் அஜித் ஒரு தோற்றத்தில் ‘நடுவிரலை’ காட்டியபடி இருக்கும்படி செய்துள்ளனர். அந்த விரல் தெளிவில்லாமல் ப்ளர் செய்யப்பட்டிருந்தது. இருந்தாலும் ஒரு முன்னணி நடிகரின் போஸ்டரை இப்படியா வடிவமைப்பது என இயக்குனர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்