தளபதியை அடுத்து தனுஷ்தான். முடிவு செய்துவிட்ட ஹேமாருக்மணி

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (01:50 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தால் மிகப்பெரிய லாபம் பெற்ற ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம், இனி அடுத்தடுத்து பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை தைரியமாக தயாரிக்க முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


இந்த நிலையில் தளபதி விஜய் படத்தை அடுத்து தனுஷ் படத்தை தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இதுகுறித்து சற்றுமுன்னர் இந்நிறுவனத்தின் சி.இ.ஒ ஹேமாருக்மணி தனது டுவிட்டரில் உறுதி செய்தார்.

'மெர்சல்' படத்தை தொடர்ந்து அடுத்த ஆச்சரியமான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் எதிர்பார்க்கலாம். முதல்முறையாக பலகலைகளில் வல்லவரான தனுஷுடன் கைகோர்க்க உள்ளோம்' என்று டுவீட் செய்துள்ளார். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்