விஜய்க்கு ஜோடி ரகுல் ப்ரீத்சிங்கா?

வெள்ளி, 17 நவம்பர் 2017 (16:16 IST)
விஜய்யின் 62வது படத்தில் ஜோடியாக நடிக்க இருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


 
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைய இருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத்  தயாரிக்கிறது.
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்த ரகுல் ப்ரீத்சிங்கிற்கு, அந்தப் படம் தோல்வியாகத்தான் அமைந்தது. கார்த்தி ஜோடியாக அவர் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தப் படம் சக்சஸ் ஆனால் மட்டுமே  விஜய் படத்தில் அவர் நடிப்பார். இல்லையென்றால், வேறு ஹீரோயின் தான் நடிக்க வேண்டியது வரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்