விஜய்ன்னு பேரு வச்சவங்க எல்லாம் அப்பாவியா இருப்பாங்க: ராதிகா

வியாழன், 16 நவம்பர் 2017 (02:09 IST)
விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாடல்கள் வெளியானதுடன் முதல் பத்து நிமிட காட்சிகளும் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


 


இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகை ராதிகா, விஜய் ஆண்டனியை புகழ்ந்து பேசினார். தனக்கு உண்மை, உழைப்பு இவை இரண்டும் மிக மிக பிடிக்கும் என்றும், என்னிடம் உள்ள அதே உண்மை, உழைப்பை விஜய் ஆண்டனியிடமும் பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் விஜய் என்று பெயர் வைத்தவர்கள் எல்லாருமே பார்க்க அப்பாவியாய் இருப்பார்கள், ஆனால் அவர்கள் தான் சூப்பராக இருப்பார்கள் என்று கூறிவிட்டு அது ஜோசப் விஜய்யாக இருந்தாலும் சரி, விஜய் ஆண்டனியாக இருந்தாலும் சரி என்று கூறினார். ராதிகா இவ்வாறு கூறியதும் கூட்டத்தில் இருந்தவர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது. பிச்சைக்காரன்' போலவே இந்த படமும் வெற்றி பெற்று விஜய் ஆண்டனி முன்னணி இடத்தை பிடிப்பார் என்று அவர் மேலும் வாழ்த்தினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்