தனுஷின் அடுத்த பட டைட்டில் ‘உலகம் சுற்றும் வாலிபன்?

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (20:47 IST)
தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’, பொல்லாதவன்’ போன்ற படங்கள் ரஜினி பட டைட்டிலாக இருந்த நிலையில் தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் ஒரு படத்தில் எம்ஜிஆரின் சூப்பர்ஹிட் படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற டைட்டில் வைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது
 
 
‘பேட்ட’ படத்திற்கு பின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷ் கேங்க்ஸ்டராக நடித்து வருவதாகவும் இந்த படத்தின் வில்லனாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மொ நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார்.
 
 
இந்த படத்தின் நாயகன் தனுஷ், உலகம் முழுவதும் சுற்றி வரும் ஒரு கேரக்டர் என்பதால் இந்த படத்திற்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற டைட்டிலை வைக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆலோசனை செய்து வருகிறார். இருப்பினும் இந்த படத்தின் டைட்டில் இன்னும் இறுதி செய்யப்படவில்லை
 
 
ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். ஷ்ரேயாஸ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்