தொடங்கியது தனுஷ் கார்த்திக் நரேன் படத்தின் படப்பிடிப்பு – வெளியான புகைப்படங்கள்!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (16:23 IST)
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக D 43 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஏற்கனவே 3 பாடல்கள் உருவாக்கப்பட்டு விட்டன. சமுத்திரக்கனி மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.

இது சம்மந்தமான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்க செல்லவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்