சூர்யாவின் பட்டியலில் மேலும் ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படம் – இயக்குனர் இவர்தான்!

வெள்ளி, 8 ஜனவரி 2021 (16:12 IST)
இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்க உள்ளாராம்.

அதலபாதாளத்தில் இருந்த சூர்யாவின் மார்க்கெட்டை சூரரைப் போற்று திரைப்படம் தூக்கி நிறுத்தியுள்ளது. இதையடுத்து அவர் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். பாண்டிராஜ், வெற்றிமாறன் என வரிசையாக இயக்குனர்கள் அவர் பட்டியலில் இருக்கின்றனர். இந்நிலையில் இப்போது அவர் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம்.

இந்த படமும் சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாக உள்ளதாம். மிகப்பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தை அயலான் படத்தின் பணிகளை முடித்த பின்னர் தொடங்க உள்ளராம் ரவிக்குமார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்