தியேட்டரில் கல்லா கட்டிய குபேரா… ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

vinoth

வெள்ளி, 11 ஜூலை 2025 (12:47 IST)
தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த 'குபேரா' திரைப்படம் கடந்த மாதம் பேன் இந்தியா படமாக ரிலீஸானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்க சுனில் நாரங் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் இருந்தும் இதை ஒரு தெலுங்கு படமாகவே ரசிகர்கள் பார்த்ததால் தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படத்துக்குக் கிடைக்கவில்லை.

ஆனால் தெலுங்கில் நல்ல வசூலைப் பெற்று பாராட்டுகளைக் குவித்தது. இதையடுத்து தெலுங்கில் இந்த படத்துக்கு வெற்றி விழா நடத்திக் கொண்டாடி வருகின்றனர் படக்குழுவினர். இந்த படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசூலில் பெரும்பகுதி தெலுங்கு பதிப்பில் இருந்துதான் கிடைத்துள்ளது.

இந்நிலையில் குபேரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை 18 ஆம் தேதி ‘குபேரா’ திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்