சசிகுமாரின் ‘அயோத்தி’ ரீமேக்கில் நடிக்கும் தெலுங்கு ஹீரோ!

vinoth

புதன், 9 ஜூலை 2025 (09:05 IST)
சசிகுமார், CWC புகழ், ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த ‘அயோத்தி’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆனது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லி இருக்கும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்விப் படங்களாகவே கொடுத்து வந்த சசிகுமாருக்கு இந்த படம் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. பின்னர் ஓடிடியில் வெளியாகி அங்கும் பாராட்டுகளைப் பெற்றது. இந்த படம் வசூல் ரீதியாக தனக்குப் பெரிய வெற்றியைத் தராவிட்டாலும் நல்ல படத்தைத் தயாரித்த நிறைவைத் தந்ததாக தயாரிப்பாளர் ரவீந்தரன் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அயோத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாகார்ஜுனா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாகார்ஜுனாவின் 101 ஆவது படமாக இந்த படம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்