’தனுஷ் 54’ படத்தில் இணைத் தயாரிப்பாளராக இணைந்த முன்னாள் தியேட்டர் அதிபர்!

vinoth

வெள்ளி, 11 ஜூலை 2025 (09:26 IST)
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். இந்த படத்தின் வெற்றி காரணமாக கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார் விக்னேஷ் ராஜா. தற்போது தனது இரண்டாவது படமாக தனுஷை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் ஆனது. இந்த படம் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டும் தொடங்குவதில் தாமதம் ஆனது. நேற்று பூஜையோடு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தற்காலிகமாக இந்த படத்துக்கு ‘தனுஷ் 54’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக மமிதா பைஜு நடிக்க, ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தை வேல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திங் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திங் ஸ்டுடியோஸ் நிறுவனம் சென்னையின் சினிமா அடையாளங்களில் ஒன்றாக  இருந்த சத்யம் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரின் கிரண் ரெட்டியின் தயாரிப்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சத்யம் தியேட்டரை விற்ற பின்னர் சினிமாவில் அந்த பணத்தை முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதையடுத்து இப்போது அவர் சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்