காயடு லோஹர் வெளியே.. மமிதா பாஜூ உள்ளே.. தனுஷின் அடுத்த பட நாயகி அப்டேட்..!

Siva

செவ்வாய், 8 ஜூலை 2025 (18:35 IST)
தனுஷின் 54ஆவது திரைப்படத்தை, ’போர்த்தொழில்’ இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை நாளை மறுநாள் அதாவது ஜூலை 10ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பூஜையில் தனுஷ் உட்பட படக்குழுவினர் பலர் கலந்துகொள்வார்கள் என்றும், அதை தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காயடு லோஹர் அல்லது பூஜா ஹெக்டே நடிப்பார் என்று செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவர்கள் இருவருமே நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக மமிதா பாஜூ  இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தனுஷுக்கு 41 வயது ஆகும் நிலையில், மமிதா பாஜூ வுக்கு 24 வயதுதான் என்பதால், இருவருக்கும் இடையே 17 வருட வயது வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்க இருப்பதாகவும், மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு பீரியட் படமாக உருவாக இருப்பதாகவும், இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்