டைட்டிலை கூட ஓடிடி நிறுவனங்கள் தான் முடிவு செய்கிறதா? தனுஷ் பட டைட்டிலுக்கு நிபந்தனை?

Siva

வியாழன், 10 ஜூலை 2025 (18:53 IST)
ஒரு திரைப்படத்திற்கு ஓடிடி பிசினஸ் என்பது தற்போது தயாரிப்பாளர்களுக்கு மிக முக்கியம் என்ற நிலையில், ஓடிடி நிறுவனங்கள் சொல்லும் நிபந்தனைகளை எல்லாம் தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த நிலையில், தனுஷின் 54வது படத்தின் பூஜை இன்று போடப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் குறித்து ஓடிடி நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
பூஜைக்கு முன்பே தனுஷின் 54வது படத்தின் உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று வாங்கி உள்ள நிலையில், இந்தப் படத்தின் டைட்டிலை ஆங்கிலத்தில் ஒரே ஒரு வார்த்தையில் வரும் வகையில் வைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஒரு படத்தின் டைட்டில் தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும் என்ற நிலையெல்லாம் மாறி, தற்போது ஓடிடி நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன என்ற நிலை உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில் டைட்டில் விஷயத்தில் எல்லாம் தலையிட மாட்டேன், இயக்குனர் இஷ்டப்படி டைட்டில் வைத்துக் கொள்ளலாம் என தனுஷ் ஒதுங்கி விட்டதாகவும், ஆனால் தயாரிப்பாளரோ, ஓடிடி பந்தனையை ஏற்று ஒரே வார்த்தையில் ஆங்கிலத்தில் ஒரு டைட்டில் வையுங்கள் என்று இயக்குனரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்