தனுஷ் நடிப்பில் உருவான ராயன் படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் செட் போடப்பட்ட நிலையில், அதே செட்டை பயன்படுத்தி கொள்ள 'கூலி' படத்திற்கு அவர் அனுமதி கொடுத்ததாகவும், 'கூலி' படத்தின் ஒரு சில காட்சிகள் அந்த செட்டில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இது முழுக்க முழுக்க வதந்தி என்றும், தனுஷ் நடித்த படத்தின் செட்டுகளை 'கூலி' மற்றும் 'ஜனநாயகன்' ஆகிய இரண்டு படங்களின் குழுவினர்களும் பயன்படுத்தவில்லை என்றும், அவர்கள் தனியாக செட் போட்டுத்தான் படப்பிடிப்பு நடத்தினார்கள் என்றும் இரண்டு படங்களின் வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.
எனவே, தனுஷ் பட செட்டைத்தான் 'கூலி', 'ஜனநாயகம்' படக்குழுவினர் பயன்படுத்தினர் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.