சிவகார்த்திகேயன் பேச்சால் கடுப்பான தனுஷ் ரசிகர்கள்… பழைய வீடியோவைப் பகிர்ந்து ஆவேசம்!

vinoth
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (15:50 IST)
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து இன்று படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன் “உங்களுக்கு அடையாளம் கொடுத்ததே நான்தான், உங்களைத் தேடிக் கண்டுபிடித்ததே நான்தான் என்றெல்லாம் யாரிடமும் நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் ‘என்னிடம் நான் தான் உனக்கு வாழ்க்கைக் கொடுத்தது என்று சொல்லியே பழக்கப்படுத்தி விட்டனர்’. அந்த மாதிரி ஆள் நான் இல்லை” எனப் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு தனுஷைக் குத்திக் காட்டுவது போல உள்ளதாக சர்ச்சைகள் எழுந்தன. சிவகார்த்திகேயனைக் கதாநாயகனாக்கி அவரை வைத்து எதிர் நீச்சல் மற்றும் மான் கராத்தே ஆகிய படங்களைத் தயாரித்து வளர்த்து விட்டவர் தனுஷ். ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பேச்சால் கடுப்பான தனுஷ் ரசிகர்கள் வெற்றிமாறன் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் பற்றி பேசும்  பழைய வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில் வெற்றிமாறன் “தனுஷ் என்னிடம் ஒருநாள் காமெடி திரைக்கதை எதாவது இருந்தால் சொல்லுங்கள் என்றார். நான் காமெடி படம் பண்ணப் போறீங்களா என்று கேட்டேன். அவர் எனக்கில்லை, சிவகார்த்திகேயனுக்கு என்றார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக படம் பண்ணுகிறாரா என்று கேட்டேன். சார் அவர் திறமையானவர் சார். ஒரு சூப்பர் ஸ்டாராக வரும் அளவுக்கு அவரிடம் திறமை இருக்கு என்றார். அதுபோல திறமைகளைக் கண்டுபிடுப்பதில் தனுஷ் தனிச்சிறப்பு வாய்ந்தவர்” எனப் பேசியுள்ளார். இந்த வீடியோவைப் பகிரும் தனுஷ் ரசிகர்கள் “எந்த நிலை சென்றாலும், வந்த வழி மறக்காதே” என்று கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்