கூழாங்கல் படத்தை இயக்கிய பி எஸ் வினோத்ராஜ், தன்னுடைய இரண்டாவது படமான கொட்டுக்காளி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டஇயக்குனர் மிஷ்கின் இயக்குனர் வினோத்ராஜை பாராட்டிப் பேசினார். அப்போது “கூழாங்கல் முடித்ததும் வினோத் ராஜ் என்னைப் பார்த்து கொட்டுக்காளி என்றொரு படம் பண்ணி இருப்பதாக சொன்னான். யாரு இசை என்றேன். யாருமில்லை என்றான். என்ன பைத்தியம் மாதிரி பேசுகிறான் என்று நினைத்தேன். ஆனால் இன்று இந்த டிரைலரைப் பார்த்த போது என்னை அவன் செருப்பால் அடித்துவிட்டான் என்று உணர்கிறேன்.