தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு… பின்னணி என்ன?

vinoth
ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (10:36 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்தனுஷ்.  இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்த நட்சத்திர தம்பதியினர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரியவுள்ளதாக அறிவித்தனர். இதையடுத்து குழந்தைகள் தாய் ஐஸ்வர்யாவோடு வசித்து வருகின்றனர்

இவர்களை சேர்த்து வைக்க ரஜினி உள்ளிட்ட நெருங்கிய குடும்ப நண்பர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் எந்த பலனும் இல்லை என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதற்கான முகாந்திரம் எதுவும் தெரியவில்லை.

இதற்கிடையில் இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று (அக்டோபர் 19 ஆம் தேதி) நடந்த விசாரணைக்கு இருவரும் ஆஜர் ஆகாததால், அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்