பிரிசன் பிரேக் வகைக் கதையா ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்க வாசல்’?

vinoth
ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (10:29 IST)
பண்பலை தொகுப்பாளராக இருந்த ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமாக்களைக் கண்டபடி வறுத்தெடுத்து விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பிறகு அவருக்கு ‘தீயா வேல செய்யணும் குமாரு’ படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு அவர் நடித்த நானும் ரௌடிதான் படம் அவரைப் பிரபல நடிகராக்கியது.

அதன் பின்னர் எல் கே ஜி படத்தில் கதாநாயகனாக நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். அப்படி ஆர் ஜே பாலாஜி நடிக்கும் படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் இணை இயக்குனர் சித்தார்த் என்பவர் இயக்குகிறார்.  சார்பட்டா பரம்பரை மற்றும் தங்கலான் போன்ற படங்களுக்குத் திரைக்கதை எழுதிய தமிழ்ப் ப்ரபா இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்.

சொர்க்கவாசல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. 1999 ஆம் ஆண்டு சிறைக் கைதியாக இருப்பது போன்ற தோற்றத்தில் ஆர் ஜே பாலாஜி போஸ்டரில் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் கதைச்சுருக்கத்தில் இது ஜெயிலில் இருந்து தப்பிக்கும் “Prison Break” வகைக் கதை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்