தனுஷ் 50… கூடிக்கொண்டே போகும் நட்சத்திர பட்டாளம்… இணைந்த பிரபல நடிகை!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (10:45 IST)
பவர் பாண்டி படம் மூலம் இயக்குநராக தன்னை நிரூபித்த தனுஷ். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார்.  இதை அடுத்து இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அந்த படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷை தவிர மேலும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்க உள்ளனர். எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளியும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்