அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

Siva

திங்கள், 14 ஜூலை 2025 (17:34 IST)
அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார் என்று கூறப்பட்டாலும், இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதற்குள், ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை அடுத்து அஜித் நடிக்க இருக்கும் படத்தை இயக்குவது யார் என்பது குறித்த பொய் மூட்டைகளை யூடியூபர்கள் சிலர் பரப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஏற்கனவே, "அஜித் படத்தை தனுஷ் இயக்க உள்ளார்" என்றும், "அஜித்தை பார்த்து தனுஷ் கதை சொல்ல உள்ளார்" என்றும் ஒரு பொய்யான தகவலை சிலர் பரப்பி வருகின்றனர். அப்படி ஒரு திட்டம் அஜித்துக்கு இல்லை என்றும், தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க வாய்ப்பில்லை என்றுதான் அஜித்தின் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
இந்த நிலையில், தற்போது அடுத்த பொய் மூட்டையாக கார்த்திக் சுப்பராஜை யூடியூபர்கள் கொண்டு வந்துள்ளனர். "ஒரு ஒன் லைன் கதையை கார்த்திக் சுப்பராஜ் அஜித்திடம் சொன்னதாகவும், அஜித் அதை கேட்டு பரிசீலனை செய்வதாக கூறியதாகவும்" கூறி வருகின்றனர். ஆனால், அஜித் வட்டாரங்களில் விசாரித்தபோது, "இப்போதைக்கு ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் மட்டும்தான் கமிட் ஆகியுள்ளார். அதற்கு அடுத்த படம் யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. 
 
கார்த்திக் சுப்பராஜ் அஜித் படத்தை இயக்குகிறார் என்று கூறப்படும் தகவல் பொய்யானது" என்று கூறி வருகின்றனர். மொத்தத்தில், யூடியூபில் வியூஸை அதிகரிப்பதற்காக அவ்வப்போது சில பொய் மூட்டைகளை அவிழ்த்து வருகிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்