''தனுஷ்50'' படத்தில் நடிக்கிறேனா? பிரபல நடிகர் விளக்கம்

புதன், 14 ஜூன் 2023 (14:38 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், இவர் நடிப்பில், அசுரன், கர்ணன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன.

இந்த நிலையில், தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை அடுத்து, 'தனுஷின் 50 வது படத்தை அவரே இயக்கி  நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார்.  இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஜூலை 1 -ல் இப்பட ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக  தகவல் வெளியான நிலையில், இப்படத்தில்  விஷ்ணு விஷால் நடிப்பது பற்றி வெளியான தகவலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில்,  ''அந்தப் படத்தில் நான் நடிப்பதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை.  அப்படத்தில் நான் நடிக்க விரும்பினாலும் என் மற்ற பணிகள் காரணமாக என்னால் நடிக்க முடியாது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக'' என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் இவர், தனுஷின் 50வது படம் பற்றி பேசுவதாக  ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்