லோக்கி என்ன பண்ணி வெச்சுருக்க? மகிழ்ச்சியில் கட்டியணைத்த ரஜினி! - கூலி படம் இன்னொரு தளபதியா?

Prasanth K

செவ்வாய், 15 ஜூலை 2025 (10:25 IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம்தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தின் மிகப்பெரிய பேச்சுப்பொருளாக உள்ளது.

 

கமல்ஹாசனுக்கு ‘விக்ரம்’, விஜய்க்கு ‘மாஸ்டர்’, ‘லியோ’ என வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்துடன் இணைகிறார் என்ற செய்தி வெளியானது முதலே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது. அதுமட்டுமல்லாமல், கூலி திரைப்படத்தில் ஆமிர்கான், நாகர்ஜூனா, உபேந்திரா என பல மொழி ஸ்டார்களும் இணைந்துள்ளதால் தமிழின் முதல் 1000 கோடி கலெக்‌ஷன் படமாக இது மாறுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

 

 

இந்நிலையில் சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ் “கூலி டப்பிங் பணிகள் முடிந்ததும், ப்ரிவ்யூ பார்த்த ரஜினி சாருக்கு ரொம்ப மகிழ்ச்சி. என்னை கட்டியணைத்து வாழ்த்தினார். எனக்கு இன்னொரு தளபதி படம் கிடைச்ச மாதிரி இருக்கு என்றார். இந்த படம் முதல் பாதி கதாப்பாத்திரங்கள் இடையேயான உணர்ச்சிகள், ட்ராமா, கொஞ்சம் ஆக்‌ஷன் என்று இருக்கும். இரண்டாம் பாதியில் அதிகமாக ஆக்‌ஷன் இருக்கும்.

 

இந்த படம் 1000 கோடி வசூலிக்குமா என்று என்னிடம் கேட்டால் அது என் கையில் இல்லை. ஆனால் நீங்கள் தரும் ரூ.150 டிக்கெட் விலைக்கு கண்டிப்பாக நீங்கள் கொண்டாடி பார்க்கும் வகையில் இந்த படம் இருக்கும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்