தேவரா படத்தின் மூலம் தமிழ்நாடு விநியோகஸ்தருக்கு இத்தனைக் கோடி நஷ்டமா?

vinoth
சனி, 5 அக்டோபர் 2024 (11:40 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில்  ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமாக உருவாகியுள்ளது ‘தேவரா’. இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தேவரா படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. பல காட்சிகள் இணையத்தில் ட்ரோல் ஆகின. ஆனாலும் படம் வசூலில் பட்டையக் கிளப்பியுள்ளது. முதல் நாளில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 172 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அதன் பிறகு படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களால் வசூல் வீழ்ச்சியடையத் தொடங்கியது.

இந்நிலையில் இந்த படத்தை தமிழ்நாட்டில் வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர் திருப்பதி ப்ரசாத்துக்கு 7 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் இந்த படத்தை 8 கோடி ரூபாய்க்கு வாங்கி வெளியிட்டுள்ளார். ஆனால் ஒரு கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திருப்பதி ப்ரசாத்தான் சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தைத் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்