போலீஸ் கதையா விஜய் 69?… டிகோட் செய்த ரசிகர்கள்!

vinoth

சனி, 5 அக்டோபர் 2024 (11:08 IST)
கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

ஷூட்டிங் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர், விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் நிலையில் இந்த படம் ஒரு போலீஸ் கதை என்று சொல்லப்படுகிறது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் அதில் இடம்பெற்ற வாசகங்களை வைத்து போலீஸ் கதை என்று கருத்துகள் எழுந்துள்ளன. மேலும் ஹெச் வினோத் போலீஸ் படங்கள் எடுப்பதில் வித்தகர் என்பதால் இப்படி ரசிகர்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்