சிவகார்த்திகேயன் டீசண்ட் ஆனவர்… வாய்ப்பில்லாததால் இப்படி சொல்கிறார்… டி இமானின் முதல் மனைவி!

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (07:01 IST)
தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆனவர்களில் இமானும் ஒருவர். தனது 18 ஆவது வயதில் தமிழன் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் சினிமா வாழ்வின் உச்சமாக ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்துக்கு இசையமைத்தார். நடிகர் சிவகார்த்திகேயனின் பல வெற்றிப் படங்களில் இசையமைப்பாளராக இமான் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகம் ஒன்றை தனக்கு செய்துள்ளதாக கூறியுள்ளார். அதில் “இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனும் நானும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை. அடுத்த ஜென்மத்தில் அவர் ஹீரோவாக இருந்து நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அதை சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். அதனால் நான் அதை சொல்லமாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இமானின் இந்த பேட்டி குறித்து ஆனந்த விகடன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் இமானின் முன்னாள் மனைவி மோனிகா பல விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ”சிவகார்த்திகேயன் எங்கள் குடும்ப நண்பர். அவர் நானும் இமானும் பிரியக் கூடாது என்று நினைத்து எங்களுக்குள் சமாதானம் பேசினார். இமானோட விவாகர்த்து முடிவை அவர் சப்போர்ட் பண்ணல. அதனால் இமான் இப்போது இப்படி பேசுகிறார். இமானுக்கு இப்போது வாய்ப்புகள் இல்லை.  அதனால் இப்படியெல்லாம் பேசி பப்ளிசிட்டி தேடிக்க விரும்புகிறார்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்