பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்துக்கு முதலில் அனிருத் இசையமைப்பாளராக பணியாற்ற வேண்டுமென படக்குழு விரும்பியது. ஆனால் அனிருத் ஏற்கனவே பல படங்களில் பணியாற்றி வருவதால் இந்த படத்தை ஏற்க முடியாது எனக் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.