கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

vinoth

சனி, 19 ஜூலை 2025 (13:52 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

ஹாட்ரிக் கொடுத்த ஷாருக் கான் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. அதனால் 2024 ஆம் ஆண்டு அவரின் எந்த படமும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அவர் ‘கிங்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.. இந்த படத்தை சுஜாய் கோஷ் இயக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் நடிக்க உள்ளார். 

இந்த படத்தின் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயமடைந்ததை அடுத்து அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா விரைந்துள்ளார். இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்