சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை வெளியில் சொல்ல முடியாது… இசையமைப்பாளர் டி இமான்!

செவ்வாய், 17 அக்டோபர் 2023 (07:21 IST)
தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆனவர்களில் இமானும் ஒருவர். தனது 18 ஆவது வயதில் தமிழன் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் சினிமா வாழ்வின் உச்சமாக ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்துக்கு இசையமைத்தார்.

இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகம் ஒன்றை தனக்கு செய்துள்ளதாக கூறியுள்ளார். அதில் “இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனும் நானும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை. அடுத்த ஜென்மத்தில் அவர் ஹீரோவாக இருந்து நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம்.

அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். இது பற்றி நான் கேட்ட போது அவர் சொன்ன பதிலை இங்கு சொல்லவே முடியாது. அவர் செய்ததை சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும். அதனால் என்னால் சொல்லமுடியாது” என ஆதங்கத்தோடு கூறியுள்ளார். சிவகார்த்திகேயனும் இமானும் இணைந்து மனம்கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்