நடிகர் கமல்ஹாசன் அரசியல் எண்ட்ரிக்கு பிறகு அவர் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அவரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தியன் 2 ஷூட்டிங்கை முடித்துள்ள கமல் அடுத்து பிராஜக்ட் கே படத்தில் நடிக்க உள்ளார்.
விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் இப்போது நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கமல்ஹாசன் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி வேட்டையாடு விளையாடு படத்தில் ஒரு மேஜிக்கை நடத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.