தலைவர் 168: ரஜினியுடன் முதன்முறையாக இணைந்த பிரபல காமெடி நடிகர்!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (18:55 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதுப்படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்காலிகமாக தலைவர் 168 என அழைக்கப்படும் இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தின் கடைசிகட்ட வேளைகளில் பிஸியாக இருந்து வருகிறார். நேற்று "தர்பார்" படத்தில் இடம்பெறவுள்ள "சும்மா கிழி" என்ற லிரிகள் வீடியோ வெளியாகி நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு கொண்டாட்டமாக தலைவர் 168 படத்தில் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. 
 
அதாவது இப்படத்தில் ரஜினிகாந்துடன் காமெடி நடிகர் சூரி இணைத்திருப்பதாக தயாரிப்பில்  நிறுவனமான சன் பிச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் சூரி ரஜினியுடன் இணைந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்