ரஜினி படத்தில் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (18:47 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாக உள்ள நிலையில், அவர் அடுத்து நடிக்க உள்ள 168வது படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார் என்பது தெரிந்ததே. ’தலைவர் 168’ என்று கூறப்படும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
முதல்கட்டமாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை தேர்வு செய்யும் பணியில் இயக்குனர் சிறுத்தை சிவா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் இசையமைப்பாளராக டி.இமான் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய வேடமொன்றில் நடிக்க சூரி ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது 
 
ரஜினியுடன் முதல் முறையாக சூரி நடிக்க உள்ளார் என்பதும் இந்தப் படத்தில் இருவரும் இணைந்து செய்யும் காமெடி தியேட்டரை கலகலப்பூட்டும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்புவும், மகளாக கீர்த்தி சுரேஷும் நடிக்கவிருப்பதாக தெரிகிறது
 
தலைவர் 168 படத்தின் பூஜை வரும் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்றும் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்