ஓப்பன்ஹெய்மர் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளே இருக்காது… சர்ப்ரைஸ் கொடுத்த கிறிஸ்டோஃபர் நோலன்!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (07:15 IST)
ஹாலிவுட்டில் வித்தியாசமான கதைகளங்களில் படம் எடுத்து உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்டிருப்பவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது முந்தைய படமான டெனட் காலத்தை திருப்புதல் வகை சயின்ஸ் பிக்சனில் பெரும் பிரம்மாண்டத்தை காட்டியது.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானில் குண்டுபோடுவதற்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் இயற்பியல் விஞ்ஞானி ராபர்ட் ஓபன்ஹெய்மர் மற்றும் குழுவினர் முதல் அணுகுண்டை வெடிக்க செய்தனர். அந்த ஓபன்ஹெய்மர் அணு ஆயுத சோதனை குறித்த அரசியல் பார்வையுடன் கூடிய படமாக இதை கிறிஸ்டோபர் நோலன் உருவாக்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் கூட கிராபிக்ஸ் பயன்படுத்தப்படவில்லை என இயக்குனர் நோலன் தற்போது தெரிவித்துள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த படத்தில் அனுகுண்டு வெடிப்பு பற்றிய காட்சிகளெல்லாம் உள்ள நிலையில் அதை உண்மையாகவே படமாக்கியுள்ளார் நோலன் என்பது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்