மீண்டும் ஒரு மிரட்டலான மேக்கிங் வீடியோ… மிஷன் இம்பாசிபிள் குழுவின் வேற லெவல் ஸ்டண்ட்ஸ்!
வியாழன், 6 ஜூலை 2023 (14:59 IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடித்து தொடர்ந்து வெளியாகி வரும் பட வரிசை மிஷன் இம்பாசிபிள். 1996ல் மிஷன் இம்பாசிபிள் முதல் பாகம் வெளியான நிலையில் இதுவரை மொத்தம் 6 பாகங்கள் இந்த படவரிசையில் வெளியாகியுள்ளது. அனைத்து பாகங்களுமே ஆக்ஷன் பட பிரியர்களுக்கு புல் மீல்ஸ் விருந்தாக அமைந்தது.
இந்த படங்களின் சிறப்பம்சமே இந்த படங்களில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளை டாம் க்ரூஸ் தானே செய்வதுதான். இந்நிலையில் மிஷன் இம்பாசிபிள் தொடரின் கடைசி பாகங்களாக மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கோனிங் பாகம் 1 மற்றும் 2 என இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.
இதன் முதல் பாகம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் இப்போது படத்தில் இடம்பெற்றுள்ள மிரட்டலான ரயில் ஸ்டண்ட் காட்சியின் மேக்கிங் வீடியோவை டாம் க்ரூஸ் இப்போது வெளியிடவே அது இப்போது வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே இதுபோல மலைமீதிருந்து டாம் க்ரூஸ் குதிக்கும் காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
This train sequence was tricky, but the outcome made it all worth it. I can't wait for everyone to see it come to life! pic.twitter.com/z067kFLIku