கமல், ரஜினிக்குப் படம் பண்ணமாட்டேன்… சிவகுமாரின் கேள்விக்கு இயக்குனர் பாலா சொன்ன பதில்!

vinoth
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (14:02 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் அதன் பிறகு அந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். படம் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது ஜனவரி மாதம் 10 ஆம் தேதியே வணங்கான் படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலா திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கான பாராட்டு விழா வணங்கான் படத்தின் ஆடியோ ரிலீஸோடு நடந்தது. அதில் சூர்யா கலந்துகொண்டு பாலா பற்றி புகழ்ந்து பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதே போல இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், பாலாவிடம் சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு பாலா தனக்கேயுரிய ஸ்டைலில் பதிலளித்தார். அதில் ஒரு கேள்வியாக “கமல், ரஜினியை வைத்து படம் பண்ணுவியா?” எனக் கேட்டார். அதற்கு பாலா “நான் பண்ணமாட்டேன். அவர்கள் பாதை வேறு, என் பாதை வேறு” என்றார்.
விடாமல் சிவகுமார் “அவர்கள் உன் பாதைக்கு வந்து  அகோரியாக நடிக்கிறேன் என்று சொன்னால்?” என்று கேட்க அதற்கு பாலா “அவர்கள் சொல்ல மாட்டார்கள்’ என்று பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்