இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் இசை வெளியீடும், அவரின் 25 ஆண்டுகால திரைவாழ்க்கையைக் கொண்டாடும் நிகழ்வும் நேற்று சென்னையில் நடந்தது. இதில் சூர்யா, மணிரத்னம், மிஷ்கின் மற்றும் பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினார்.
இந்த படத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி பேசும்போது வணங்கான் படத்தைப் பற்றி பேசுவதை விடுத்து சூர்யாவின் கங்குவா பற்றி பேசி கொந்தளிக்க ஆரம்பித்தார். அவரது பேச்சியில் “குழந்தைக்கு பால் கொடுத்து பசியை ஆற்றுவதே தாய்தான். அவளின் மாரை அறுத்து எப்படி சாப்பிடமுடியும். அதுபோலதான் சிலர் சினிமாவை நம்பி பிழைப்பு நடத்தும் சிலர் கங்குவா படத்தையும் தம்பி சூர்யாவையும் கடுமையாக விமர்சித்து அந்த பணத்தில் எப்படிதான் சாப்பிடுகிறார்களோ எனத் தெரியவில்லை.