மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி: ரஜினிகாந்த்

Siva
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (13:57 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் ’மன்மோகன் சிங் ஒரு அற்புதமான மனிதர் என்றும் சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி என்றும் கூறியுள்ளார்.
 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமான நிலையில் அவரது மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர், தமிழக துணை முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
 
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், உள்பட  பல அரசியல்வாதிகளும் திரையுலக பிரபலங்களும் அவரது மறைவுக்கு தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது ’மன்மோகன் சிங் ஒரு அற்புதமான மனிதர் என்றும் சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஒரு அரசியல் பண்பாளர் என்றும் அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்