ஆர்யா &மஞ்சு வாரியர் நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (07:28 IST)
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான எஃப் ஐ ஆர் திரைப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், தற்போது சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்துக்கு Mr.X. என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர்  முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்