மீண்டும் மும்பை அணியில் மலிங்கா… ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:29 IST)
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தனது அபார பந்துவீச்சு காரணமாக உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும் பேட்ஸ்மேன்களை தனது பந்துவீச்சால் திணறடித்தவர் என்பதும் கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்ததே.

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்த பவுலர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்ட அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போது அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்