அட்டகாச விஷ்வல்கள்… அர்ஜுன் தாஸின் நடிப்பில் சாந்தகுமார் இயக்கும் ரசவாதி படத்தின் டீசர் ரிலீஸ்!

vinoth
சனி, 6 ஜனவரி 2024 (07:40 IST)
மௌனகுரு படத்துக்கு பிறகு சாந்தகுமார் 8 ஆண்டுகள் கழித்து இயக்கியப் படம் என்பதால் மகாமுனி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரிலிஸான போது அதன் திரைக்கதை தொய்வு காரணமாக மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் ரிலிஸுக்கு பின்னர் படக்குழு பல விருது விழாக்களில் விருது வென்றது.

இந்நிலையில் இப்போது சாந்தகுமார் அடுத்து இயக்கும் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் ஜி எம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் இந்த படத்துக்கு ‘ரசவாதி’ என்ற தலைப்பை வைத்துள்ளதாக இயக்குனர் அறிவித்தார். இந்த படத்துக்கும் உலகப் புகழ்பெற்ற ரசவாதி நாவலுக்கும் தொடர்பில்லை எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்