பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.
இந்த படத்தில் படத்தில் சினேகா, பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முக்கிய வேடங்களில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி படத்தில் நடிகர் அரவிந்த்சாமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.