'ஜவான்' படம் 2 ஆம் பாகம் எடுக்க முடிவு!- அட்லீ தகவல்

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (19:14 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின்  ஜவான் படம் வெளியான 11 நாட்களில் மட்டும் ரூ.858 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று  வசூல் சாதனை படைத்து வருகிறது. ஷாருக் கானின் சமீபத்தைய படமான பதான்  மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதேபோல் ஜவான் படமும் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில், ஜவான் படம் வெளியான 11 நாட்களில் மட்டும் ரூ.858 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம்  நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படம் ரூ.1000 கோடி வசூலிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜவான் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக அட்லீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அட்லீ கூறியதாவது:

''நான் எடுத்த படங்கள் அனைத்தும் முதல் பாகத்தில் முடிந்துவிடும் வகையில் இருந்தன.  அப்படங்கள் கதைகளும் அப்படியே இருந்தான். நான் இயக்கிய படங்களின் 2 ஆம் பாகங்களை இயக்க வேண்டும் என நினைத்து இல்லை. ஆனால், ஜவான் படத்தின் 2 வது பாகம் எடுக்க வேண்டும் என ஆசையுள்ளது. இதற்கான கதை அமைந்ததும் ஜவான் 2 ஆம் பாகம் நிச்சயம் எடுப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்