விஜய் பட வில்லன் நடிகருடன் அஜித்...வைரல் போட்டோ

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (16:55 IST)
துணிவு படத்தின் வெற்றிக்குப் பின்  நடிகர் அஜித்  நடிக்கவுள்ள படம்  விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
 

இதற்கிடையே, அஜித் பல நாடுகளுக்கு பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இப்போது அஜித் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலோடு ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமீபத்தில்  இணையத்தில் வைரலானது. இதனால், அஜித்துடன் மோகன் லால் நடிக்கிறாரா ? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், இன்று கே.ஜி.எஃப் மற்றும் லியோ படங்களின் வில்லன் சஞ்சய் தத் அஜித்குமாருடன் துபாயில் சந்தித்த போது எடுத்த படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனால் விடாமுயற்சியில் சஞ்சய் தத், மோகன்லால் உள்ளிட்டோர் நடிக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

Exclusive

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்