இறுதிக்கட்டத்தில் அந்தாதூன் ரீமேக் பணிகள்! படக்குழு அறிவிப்பு

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (09:15 IST)
அந்தாதூண் தெலுங்கு ரீமேக் பணிகள் இறுதிக்கடட்த்தில் உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, ராதிகா ஆப்தே மற்றும் தபு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அந்தாதூன். ஓடிடி வெளியீட்டுக்குப் பின்னர் உலகளவில் கவனம் பெற்ற இந்த திரைப்படம். இப்போது பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதில் தமிழில் பிரசாந்த் நடிக்க தியாகராஜன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு பதிப்பான மாஸ்ட்ரோ படம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தில் ஆயுஷ்மான் வேடத்தில்  நிதின், தபு கதாபாத்திரத்தில் தமன்னா, ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மெர்லபாகா காந்தி இயக்கும் இந்த படம் கொரோனா பாதிப்பால் தாமதமான நிலையில் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்