உலக அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ள ஹாலிவுட் நடிகர்களில் பிராட் பிட்டும் ஒருவர். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் திரைப்படம அவருக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுத்தந்தது. இந்நிலையில் அதன் பின்னர் அவர் நடிக்கும் படம்தான் புல்லட் ட்ரெய்ன். ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தின் படபிடிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவழியாக மார்ச் மாதம் முடிந்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.